அந்த இயக்குநரையே ஓரங்கட்டினார் சிம்பு..லேட்டா வருவாரா? பிரபல தயாரிப்பாளர் ஓபன்..
அரசன் - சிம்பு
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் அடுத்ததாக அரசன் திரைப்படம் உருவாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உடல் எடை கூடி காணப்பட்ட நடிகர் சிம்பு பல விதமான விமர்சனங்களை எதிர்கொண்டார். இதன்பின், தனது உடல் எடையை குறைத்து ஆளே மாறினார். இது பலருக்கும் மோட்டிவேஷனாக அமைந்துள்ளது.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அளித்த பேட்டியொன்றில், சிம்பு லேட்டாக ஷூட்டிங்கிற்கு வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுவது குறித்து பேசியிருக்கிறார்.
கலைப்புலி தாணு
அதில், அரசன் படத்தின் நிகழ்ச்சியில் தான் சிம்பு பற்றி நெகிழ்ச்சியாக பேசவேண்டும் என்று இருந்தேன். தேசிங்கு பெரியசாமி படத்துக்காக சிம்பு ஒரு வருஷமா பெரிதாக முடி வளர்த்து இருந்தார். அப்போது வெற்றிமாறன் அரசன் படத்திற்காக கேட்டிருந்தார். அதனால் சிம்பு தேசிங்கு பெரியசாமி படத்தை ஓரங்கட்டிவிட்டு, அந்த முடியை வெட்டிவிட்டு வெற்றிமாறன் படத்திற்கு சென்றுவிட்டார்.

அதே நேரத்தில் அப்போது, கால்ஷீட்டில் என்ன நேரம் சொல்லியிருந்தாரோ, அதே நேரத்திற்கு 1 மணி நேரம் முன்பே வந்திருந்தாரே தவிர, 1 மணி நேரம் லேட்டாக வரவே இல்லை, ஏன் அந்த தம்பி பற்றி இப்படி சொல்றாங்கன்னு தெரியவில்லை. சிம்பு சிங்கிள் டேக் நடிகர் என்று நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த சமயத்தில், டிரீட்மெண்ட் முடித்துவிட்டு தான் வந்தார், ஆத்மாத்மமான பிள்ளை என்று சிம்பு பற்றி பகிர்ந்துள்ளார்.