திருமணம் கிடையவே கிடையாதாம்! காதலரை கழட்டிவிட்டாரா கமல்மகள் ஸ்ருதிஹாசன்!

kamal shrutihaasan
By Edward Aug 27, 2021 02:03 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். 7ஆம் அறிவு, 3 போன்ற வெற்றி படங்களில் நடிகையாக பின்னணி பாடகியாக நடித்து பிரபலமானார். கமல் மகள் என்ற அந்தஷ்த்தோடு பயன்படுத்தி தமிழ், தெலுங்கு மொழி முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார்.

இதற்கிடையில் தந்தையை போன்று காதல் சர்ச்சையிலும் சிக்கினார். நடிகர் சித்தார்த்துடன் காதல், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவரை காதலித்து தோல்வி கண்ட பின் தற்போது சாந்தனு என்ற டூடுல் கலைஞரை காதலித்து வந்தார். சமீபகாலமாக அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பார்.

இந்நிலையில் ரசிகர்களுடன் பேசிய ஸ்ருதி திருமணம் எப்போது என்ற கேள்விக்கு, திருமணம் செய்யப்போவதில்லை என்று கூறியுள்ளார். இதனால் ஸ்ருதியின் சமுகவலைத்தளப்பக்கத்தை நோண்டிய ரசிகர்கள் காதலர் சாந்தனுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டெலீட் செய்துவிட்டார் என்று கூறப்படுகிறது. அதிலும் அவருடன் நெருக்கமாக வெளியில் சென்ற புகைப்படங்களை இன்ஸ்டா ஸ்டோரியில் மட்டும்தான் வெளியிட்டு வந்தாராம்.