என் படுக்கையறையை வந்து எட்டி பாக்குறியே டா.. கிசுகிசுக்கு கொந்தளித்த கமல்

Kamal Haasan Simran Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 18, 2023 07:30 AM GMT
Report

உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பை தாண்டி பன்முகங்களை கொண்டவர் என்பது நமக்கு தெரியும். தற்போது இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

கமல் சினிமா வாழ்க்கையிலும் நிஜ வாழக்கையில் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். 90 ஸ் பேவரைட் நடிகையாக வலம் வந்த சிம்ரன் உடன் கமல் பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

இப்படத்தில் இருவரும் கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கும், அப்போது கமலும் சிம்ரனும் காதலிப்பதாக பல கிசுகிசுக்கள் வெளிவந்தது.

மேலும் ஒரு வார பத்திரிகை கமல் சிம்ரன் குறித்து மோசமாக பேசியிருந்தது. இதற்கு கமல், " என் படுக்கையறையை வந்து எட்டி பாக்குறியே டா" என்று கோபமாக பதில் அளித்ததாக செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.