கமல் கொடுத்த டார்ச்சர்!! அந்த நடிகை வெளிநாட்டுக்கே ஓடிட்டாங்க.. சர்ச்சை கிளப்பிய நடிகர்..
முன்னனி நடிகைகள் கூட சக நடிகர்களுடன் நெருக்கம் ஏற்பட்டாலே போதும், சுற்றி இருப்பவர்கள் அதை தவறாக பாவித்து சினிமாத்துறையில் இருந்தே தூக்கிவிடும் அளவிற்கு வதந்திகளை பரப்பி விடுவார்கள். அப்படிபட்ட காலகட்டத்தில் பல வதந்திகள் வந்தாலும் தைரியமுடன் பத்திரிக்கையாளர்களையும் ஊடகத்துறையையும் சமநிலையில் சந்தித்து வந்தவர் நடிகர் கமல் ஹாசன். கதாநாயகனாக ஆரம்பித்த காலத்தில் இருந்தே பல சர்ச்சைகளை சந்தித்தார் கமல்.
அப்படி கமல் டார்ச்சர் கொடுத்தும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தும் பல நடிகைகள் சினிமாவை விட்டு ஓடிவிட்டனர். அதில் ஒருவர் நடிகை அபிராமி என்று நடிகர் பயில்வான் கூறியுள்ளார். முன்னணி நடிகர்கள் படத்தில் 90-களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக இருந்தார். கமலுடன் விருமாண்டி படத்தில் கமலுடன் ஜோடி போட்டதை அடுத்து கமல் டார்ச்சர் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார் பயில்வான்.
விருமாண்டி படத்தில் அவர் கொடுத்த டார்ச்சரால் அடுத்த ஆண்டே வெளிநாட்டு நபரை காதலித்து திருமணம் செய்து அங்கேயே செட்டிலாகிவிட்டார். அதன்பின் குடும்பத்தை பார்த்து சினிமாவில் இருந்து பல ஆண்டுகளாக ஒதுங்கியே வாழ்ந்து வந்தார்.
பிறகு மாறன் படத்தில் நடித்து மீண்டும் சினிமாவில் எண்ட்ரி கொடுத்துள்ள அபிராமி இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் ஒருசில தமிழ், மலையாள மொழிகளில் நடித்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றியும் வருகிறார்.
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் Thug Life படத்தில் கமிட்டாகி இருக்கிறாராம். 20 ஆண்டுகள் கழித்து கமலுடன் இணைந்துள்ளார் அபிராமி என்பது குறிப்பிடத்தக்கது.