இந்த லிஸ்ட்டில் கமல் ஹாசனை மிஞ்ச யாருமில்லை! இதுதான் வேறலெவல்?
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் உலகநாயகனாகவும் பல ஆண்டுகளாக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். இந்தியன் 2, விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போதைய இளம் நடிகர்கள் மூத்த நடிகர்களின் இன்ஸ்பிரேஷனாக இருப்பவர் கமல் ஹாசன் தான். அவரின் வசூலிலும் சரி இயக்கம், தயாரிப்பு, வசனம், எழுத்தாளர் என மற்ற விஷயங்களிலும் சரி அவரை மிஞ்ச முயற்சி செய்து ஓரளவிற்கு இடத்தை பிடித்தாலும் ஒரு விஷயத்தை மட்டும் ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களால் கூட முடியாது.
60 ஆண்டுகளாக சினிமாவில் இருந்த கமல்ஹாசன் பிரெஞ்ச், வங்காளம் உள்ளிட்ட 5 மொழிகளுக்கு மேல் பேசக்கூடியவர். மேலும் அபூர்வ சகோதரர்கள் போல சென்னை பாஷையில் இருந்து கோயப்புத்தூர் பாஷை வரை தமிழ் நாட்டில் அந்ததந்த மாவட்டத்தில் பேசும் தமிழ் பாஷகளை சரளமாக பேசக்கூடியவர்.
அதற்கேற்ப உடல்மொழியையும் மாற்றி நடிக்கக்கூடியவர் நடிகர் கமல் ஹாசன் என்பது தான் சாத்தியமானது. இது எந்த நடிகருக்கு இது போன்ற திறமை வரும் என்பது கேள்விக்குறி தான்.