கொரோனாவால் பாதித்த கமல் ஹாசன் எப்படியிருக்கிறார்! மருத்துவமனை விளக்கம்!

தமிழ் சினிமாவின் உலக நாயகனாக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். அரசியல் மற்றும் சினிமாவில் இந்த வயதிலும் சுறுசுறுப்பாக நடித்து வருகிறார். தற்போது பிக்பாஸ் 5 சீசனையும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பிலும் பிஸியாக இருந்து வந்த கமல் ஹாசன் சில தினங்களுக்கு முன் அமெரிக்காவிற்கு சென்று கதர் ஆடை விளம்பரப்படுத்தி இந்தியா வந்துள்ளார்.

அதிலிருந்து இரு நாட்களாக வரட்டு இரும்பல் காய்ச்சலில் அவதியுற்ற நிலைல் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானதை அறிவித்தார். இரு நாட்களாகியும் கமல் பற்றிய தகவல் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது ராமசந்திரா மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கொரோனாவால் சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது அவரின் உடல் நிலை சீராகவுள்ளது என்று தெரிவித்துள்ளனர். இதனால் கமல் ஹாசனின் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்