அந்த நடிகை தான் வேண்டும்!! இயக்குனரிடம் அடம்பிடித்த கமல் ஹாசன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து பல வெற்றிகளை கண்டு வரும் நிறுவனம் சத்ய ஜோதி ஃபிலிம்ஸ். இந்நிறுவனத்தினை டி ஜி தியாகராஜன் தலைமை ஏற்று நடத்தி வருகிறார்.
கமல் நடிப்பில் வெளியான மூன்றாம் பிறை படத்தில் ஆரம்பித்து தற்போது கேப்டன் மில்லர் படம் வரையில் பிஸியான படங்களை தயாரித்து வருகிறார் தியாகராஜன். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கமல் ஹாசன் பற்றி சில விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

தான் நடிக்கும் கதையில் இந்த நடிகைகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நடிகைகளின் தேர்வும் கவனம் செலுத்துவாராம் கமல் ஹாசன்.
அப்படி இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் மூன்றாம் பிறை படத்தில் கமல் , ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா போன்ற நட்சத்திரங்கள் கூட்டணியில் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.
அப்படத்தில் நடிகை ஸ்ரீதேவி தான் வேண்டும் என்று கமல் ஹாசன் கூறியதால் தான் நடிக்க வைத்தோம் என்றும் சில்க் ஸ்மிதாவை பாலு மகேந்திரா தான் தேர்வு செய்தார் என்றும் படத்தினை தயாரித்த டி ஜி தியாகராஜன் கூறியிருக்கிறார்.