இனிமே நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இல்லை!! அதிர்ச்சி அளித்த நடிகர் கமல் ஹாசன்..

Kamal Haasan Bigg Boss Vijay Television
By Jai Aug 06, 2024 11:30 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். கடந்த 7 ஆண்டுகளாக 7 சீசனை கடந்து உலக நாயகன் கமல் ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சீசன் 8 துவங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இனிமே நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இல்லை!! அதிர்ச்சி அளித்த நடிகர் கமல் ஹாசன்.. | Kamal Haasan Quite Biggboiss Tamil Upcoming Season

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தான் விலகியுள்ளேன் என்றும் இனிமேல் நான் இல்லை என்றும் கமல் ஹாசன் ஒரு அறிக்கையை வெளியிட்டு அதிகாரப்பூர்வ தகவலை கூறியிருக்கிறார்.

படங்களில் கால்ஷீட் கமிட்மெண்ட்ஸ்-ஆல் வரும் பிக்பாஸ் சீசனில் பங்கேற்க முடியவில்லை என்ற காரணத்தையும் விஜய் டிவிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் குழுவினருக்கும் என் நன்றிகள் என்றும் தெரிவித்திருக்கிறார் கமல் ஹாசன். அவருக்கு பதில் இனி யார் தொகுத்து வழங்குவது என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Gallery