அம்மாவின் இறுதி சடங்கில் நண்பருக்கு ஏற்பட்ட அவமானம்!! விட்டுக்கொடுக்காமல் கமல் ஹாசன் செய்த செயல்
இந்திய சினிமாவே வியந்து பார்க்கக்கூடிய கலைஞர்களில் ஒருவர் கமல் ஹாசன். உலகநாயகனாக இருக்கும் கமல் ஹாசன் தன் நண்பர்களுக்கு மரியாதை அளிக்கும் குணம் கொண்டவர். அப்படி கமல் ஹாசனுக்கு நெருங்கிய நண்பர்களில் ஒருவராக இருந்தவர் ஆர்சி சக்தி.
கமல் ரஜினி இருவரையும் வைத்து இயக்கி இருக்கும் அவர் கமல் ஹாசனின் அம்மாவிற்கு அரவணைப்பில் இருந்தவர். அப்படி கமல் அப்போது பிஸியாக பல மொழிகளில் நடித்து வந்திருக்கும் போது தன் அம்மாவை கவனிக்கமுடியாத நிலை ஏற்பட்டது.

கிடைக்கும் நேரத்தில் அம்மாவுடன் செலவிட்டபோது உடல் நிலைக்குறைவால் கமல் அம்மா மரணமடைந்தார். இந்நிலையில், கமல் அம்மாவின் இறுதி சடங்கின் போது நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டதில் ஆர்சி சக்தியும் கலந்து கொண்டுள்ளார்.
அப்போதைய காலக்கட்டதில் பூத உடலை ஏற்றிச்செல்லும் வண்டி இல்லை. 4 பேர் தூக்கித்தான் செல்ல வேண்டும். அதனால் தன் பிள்ளையை போல் பாவித்த கமல் ஹாசனின் அம்மா உடலை தூக்க ஆர்சி சக்தி கேட்டிருக்கிறார்.
ஆனால் அங்கிருந்த பிராமணர்கள் வேறு சாதியினர் என்று அவரை தூக்கவிடவில்லை. இதனால் கோபடைந்த கமல் பிராமணர்களிடம் வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் பிராமணர்கள் அனைவரும் குடித்துவிட்டு வந்திருப்பதை அறிந்த கமல், என் நண்பர் முட்டை கூட சாப்பிடாத சுத்த சைவம்.
நீங்கள் குடித்துவிட்டு வந்திருக்கிறீர்கள் என்றும் உங்களு என் நண்பரை பேச அருகதை இல்லை என்று சண்டையிட்டு நண்பரை விட்டுக்கொடுக்காமல் அம்மாவின் உடலை தூக்க வைத்திருக்கிறார் கமல் ஹாசன்.