கமல் படத்தில் எனக்கு என்ன ரோல்! தெரியாமலே படப்பிடிப்பிற்கு சென்ற தொகுப்பாளினி..

vikram kamalhaasan vijaysethupathi logeshkanagaraj vjmaheshwari
By Edward Sep 08, 2021 06:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உலகநாயகனா இருந்து 230 படங்களுக்கும் மேல் நடித்து கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். சங்கரின் இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் லோகேஷ்கனகராஜின் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள்.

சமீபத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மூன்று நடிகைகள் கமிட்டாகியுள்ளனர் என்ற செய்தி வெளியானது. ஷிவானி, விஜே மகேஷ்வரி, மைனா உள்ளிட்டவர்கள் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் படப்பிடிப்பிற்கு சென்று மூவரும் நடித்து வரும் நிலையில், விஜே மகேஷ்வரி சில அனுபவங்களை கூறியுள்ளார்.

கமல் சார் அலுவலகத்திலிருந்து எனக்கு போன் செய்து விக்ரம் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டனர். நான் யாரோ என்னை ப்ராங்க் செய்வதாக நினைத்தேன். பின்தான் அது உண்மை என தெரிய வந்தது. ஆனால் அவர்கள் எந்தவொரு ஆடிசனும் வைக்கவில்லை.

கதாபாத்திரம் குறித்தும் என்னிடம் கூறவில்லை. நேரடியாக ஷூட்டிங்கிற்கு வர சொன்னார்கள். படப்பிடிப்பிற்கு சென்ற போதுதான் எனக்கு என்ன ரோல் என்று தெரிந்தது. விஜய் சேதுபதியுடன் அதிக காட்சிகள் நடிக்க இருப்பதாகவும் கூறினார்கள். அதனால் விஜய் சேதுபதியிடம் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன்.