விஜய்யை நெருங்க முடியாத ரஜினி, கமல்! பாக்ஸ் ஆபிஸ் கிங்ன்னா சும்மாவா?

Kamal Haasan Vijay Beast Lokesh Kanagaraj Vikram Movie
By Edward Jun 06, 2022 07:10 AM GMT
Report

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்ட அளவில் கடந்த ஜூன் 3 ஆம் தேதி உலகம் எங்கும் வெளியானது விக்ரம். பல எதிர்ப்பார்ப்புகளுடன் ரிலீசான இப்படம் விமர்சன ரீதியாக திருப்பதிபடுத்தியுள்ளது என்று படம் பார்த்தவர்களின் கருத்தாக இருந்து வருகிறது.

அதிலும் வசூல் ரீதியாக 3 நாட்கள் முடிவில் 150 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் முதல் நாள் வசூலில் 1.70 கோடியும், தமிழகத்தில் 25 கோடிக்கு மேலும் வசூலித்திருக்கிறது. இந்தியளவில் 40 கோடியும் உலகளவில் 55 கோடியும் முதல் நாளில் மட்டுமே வசூலித்துள்ளது.

கமல் ஹாசனின் சினிமா வாழ்க்கையில் இந்தபடம் தான் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய படமாக இருக்கிறது. ஆனால் இந்த வசூல் பீஸ்ட், சர்கார் படத்தின் வசூலை முறியடிக்காமல் இருக்கிறதாம்.

பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படும் தளபதி விஜய்யை கமல் இன்னும் நெருங்கவே முடியாது என்று விஜய் ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.