விலகிய கமல் ஹாசன்!! பிக்பாஸ் சீசன் 8-ன் தொகுப்பாளர் இந்த நடிகர் தானாம்..

Kamal Haasan Vijay Sethupathi Bigg Boss Vijay Television
By Jai Aug 15, 2024 05:29 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். கடந்த 7 ஆண்டுகளாக 7 சீசனை கடந்து உலக நாயகன் கமல் ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சீசன் 8 துவங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆவலுடன் ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தான் விலகியுள்ளேன் என்றும் இனிமேல் நான் இல்லை என்றும் கமல் ஹாசன் ஒரு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அதிகாரப்பூர்வ தகவலை கூறியிருக்கிறார்.

விலகிய கமல் ஹாசன்!! பிக்பாஸ் சீசன் 8-ன் தொகுப்பாளர் இந்த நடிகர் தானாம்.. | Kamal Out New Host For Biggboss Tamil Season 8 Vj

படங்களில் கால்ஷீட் கமிட்மெண்ட்ஸ்-ஆல் வரும் பிக்பாஸ் சீசனில் பங்கேற்க முடியவில்லை என்ற காரணத்தையும் விஜய் டிவிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் குழுவினருக்கும் என் நன்றிகள் என்றும் தெரிவித்திருக்கிறார் கமல் ஹாசன்.

அவருக்கு பதில் யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. மேலும் கமலுக்கு பதிலாக நடிகர் சிம்பு தொகுப்பாளராக வரலாம் என்றும் கூறப்பட்டு வந்தது.

விலகிய கமல் ஹாசன்!! பிக்பாஸ் சீசன் 8-ன் தொகுப்பாளர் இந்த நடிகர் தானாம்.. | Kamal Out New Host For Biggboss Tamil Season 8 Vj

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விஜய் சேதுபதியை தான் கமிட் செய்திருக்கிறார்களாம். அவரை வைத்து பிரமோ ஷூட்டும் நடைபெறவுள்ளதாம். வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி துவங்கும் என்றும் கூறப்படுகிறது. கமல் இடத்தை விஜய் சேதுபதி நிரப்புவாரா? என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.