சூர்யாவால் சிக்கலில் மாட்டிக்கொண்ட கமல்ஹாசனின் விக்ரம்! இதுதான் காரணமாம்!

suriya vikram kamalhaasan etharkumthuninthavan
By Edward Aug 17, 2021 05:25 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் 64 வருட சினிமா வாழ்க்கையில் கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தள்ளிபோனதால் அடுத்த படமான இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் விக்ரம் படத்தில் இணைந்து படப்பிடிப்பினை ஆரம்பித்துள்ளார்.

இப்படத்தில் கமலுடன் நடிகர் விஜய்சேதுபதி, பகத பாசில் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர். இப்படத்தின் 2 ஆம் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் காரைக்குடியில் ஏற்கனவே நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

கொரோனா சூழல் என்பதால் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இரு படங்களின் படப்பிடிப்பு நடத்த கூடாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு இன்னும் 10 நாட்கள் நடபெற்று முடியும் என்று கூறப்படுகிறது. முடிந்தபிறகு தான் விக்ரம் படத்தின் ஷுட்டிங்கை ஆரம்பிக்க முடியும் என்று கூறியுள்ளார்களாம்.