ஆரம்பிக்கலாமா? பிரம்மாண்ட லோகோவுடன் கமல்! விக்ரம் ஸ்டைலில் பிக்பாஸ் சீசன் 5..

biggboss kamalhaasan biggbosstamil5
By Edward Aug 31, 2021 12:18 PM GMT
Report

இந்தியில் பிரபல நிகழ்ச்சியாக கட்ந்த 15 ஆண்டுகளாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டு பெரிய வெற்றியை கண்டு வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி. தற்போது பிக்பாஸ் ஓடிடி யை கரண் ஜோஹர் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி என பல மொழிகளில் பிரபல தொலைக்காட்சிகள் நடத்தி வருகிறது. தமிழில் 4வது சீசன் முடிந்த நிலையில் தற்போது 5 ஆம் சீசனுன் அக்டோபர் மாதத்தில் துவங்கவுள்ளது.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் யார் என்ற தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5ன் லோகோ வெளியாகியுள்ளது. கமலின் ஸ்டைலான புதிய தோற்றத்தில் வெளியாகியுள்ள லோகோ ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் இருந்து எதிர்ப்பார்ப்பை எகிரவைத்துள்ளது.


Gallery