பிக் பாஸ் சீசன் 9 : ரெட் கார்ட் கொடுத்த விஜய் சேதுபதி!! சாண்ட்ரா காலில் விழுந்த கம்ருதீன், பாரு..

Vijay Sethupathi Bigg boss 9 tamil VJ Parvathy Kamarudin K Divya Ganesan
By Edward Jan 03, 2026 12:00 PM GMT
Report

பிக் பாஸ் சீசன்

பிக் பாஸ் சீசன் 9 கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த டிக்கெட் டூ பினாலே டாக்ஸ் இந்த வாரம் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த கார் டாஸ்க் தான் பரபரப்பாக பேசப்படும் ஒன்றாக மாறி இருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 9 : ரெட் கார்ட் கொடுத்த விஜய் சேதுபதி!! சாண்ட்ரா காலில் விழுந்த கம்ருதீன், பாரு.. | Kamarudin Vjparvathy Apologies Sandra For Redcard

பாரு மற்றும் கம்ருதின் இருவரும் இணைந்து மிகவும் மோசமாக சாண்ட்ரா பற்றி பேசியது, அதை தொடர்ந்து இருவரும் சேர்ந்து சாண்ட்ராவை காரை விட்டு கடுமையான முறையில் வெளியில் தள்ளியது என மோசமான செயலில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

காலில் விழுந்த கம்ருதீன், பாரு

இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் நட்சத்திரங்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. பாருவுக்கும் கம்ருதினுக்கும் ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று கூறி வந்த நிலையில், சனிக்கிழமையின் 2வது பிரமோவின் போது, விஜய் சேதுபதி பார்வதிக்கும் கம்ருதீனுக்கும் ரெட் கார்ட் கொடுத்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 9 : ரெட் கார்ட் கொடுத்த விஜய் சேதுபதி!! சாண்ட்ரா காலில் விழுந்த கம்ருதீன், பாரு.. | Kamarudin Vjparvathy Apologies Sandra For Redcard

தற்போது 3வது பிரமோ வீடியோவில், சாண்ட்ராவிடம் பார்வதி மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் கம்ருதீன் சாண்ட்ராவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.