கழுத்தில் மாங்கல்யம்!! ரகசிய திருமணம் செய்தேனா!! நடிகை கங்கனா பதில்..

Gossip Today Bollywood Indian Actress Kangana Ranaut Marriage
By Jai May 22, 2026 01:00 PM GMT
Report

கங்கனா ரனாவத்

மாடலிங் துறையில் இருந்து தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை கங்கனா ரனாவத். தற்போது பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்து வருகிறார்.

கழுத்தில் மாங்கல்யம்!! ரகசிய திருமணம் செய்தேனா!! நடிகை கங்கனா பதில்.. | Kangana Marriage Rumours I Won T Marry Secretly

கங்கனா தற்போது பல படங்களில் நடித்து வரும் நிலையில், பொது இடத்திற்கு வந்து சென்ற வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதில், கழுத்தில் மாங்கல்யத்துடன் மாடர்ன் உடையணிந்து வெளியே வந்துள்ளார் கங்கனா.

இதனை பார்த்த பலரும் கங்கனா, ரகசிய திருமணம் செய்து கொண்டாரா? என்ற கேள்வியும் வதந்தி செய்திகளும் பாலிவுட்டில் பரவியது. இதனையறிந்த கங்கனா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அதற்கான விளக்கத்தை கொடுத்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

கழுத்தில் மாங்கல்யம்!! ரகசிய திருமணம் செய்தேனா!! நடிகை கங்கனா பதில்.. | Kangana Marriage Rumours I Won T Marry Secretly

ரகசிய திருமணம்

அதில், நான் தினமும் சிட்டியின் சுற்றுப்பகுதிகளுக்கு படப்பிடிப்பிற்காக சென்று வருகிறேன். யாரோ ஒருவர் படத்தின் கதாபாத்திர லுக்கை புகைப்படத்தை எடுத்துவிட்டு இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கினார்.

இப்போது அதை பார்த்துவிட்டு பலரும் எனக்கு கால் செய்து கேட்கிறார்கள். ஆனால் இந்த திருமணமான பெண் தோற்றத்தில் என்ன விஷயம் இருக்கிறது. நடிகர்கள் எல்லா விதமான கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். சத்தியமாக நான் ரகசியமாக திருமணம் செய்துக்கொள்ளமாட்டேன் என்று கூறியிருக்கிறார் கங்கனா ரனாவத்.

தற்போது கங்கனா, குயின் 2 படத்தின் ஷூட்டிங்கில் நடித்து வருவதா; அப்படத்தின் லுக்கில் வந்ததை பலரும் திருமணம் என்று கூறியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Gallery