ஐஸ்வர்யா ராய், நயன்தாராவையே மிஞ்சிய சம்பளம்!! பிரபல நடிகைக்கு 10 கோடியை அள்ளிக்கொடுத்த தயாரிப்பாளர்!!
பொன்னியின் செல்வன் படத்திற்கு இணையாக பிரம்மாண்ட முறையில் லைக்கா நிறுவனம் சந்திரமுகி 2வை தயாரித்து வருகிறது. இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களில் நடிப்பில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகா அரசகுல பெண் போல் மாறி நடித்திருப்பார். அந்த அரசகுல பெண் அப்படத்தில் ஓவியமாக தான் காட்டியிருப்பார்கள்.
தற்போது அந்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிப்பதாக லைக்க நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க கங்கனா 10 கோடி அளவில் சம்பளமாக கேட்டுள்ளாராம்.
அதற்கு தயாரிப்பு நிறுவனம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் கொட்டிக்கொடுத்திருக்கிறார்கள். ஆனால் கங்கனா ஷூட்டிங்கில் செய்யும் டார்ச்சரால் இயக்குனர் பி வாசு கடுப்பாகி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.