அந்த இடம் பெரிதாக இருக்க இதான் காரணம்.. கோபத்தில் பேசிய நடிகை கனிகா..
2002 -ம் ஆண்டு வெளிவந்த 'பைவ் ஸ்டார்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை கனிகா. இதையடுத்து சில படங்களில் நடித்து வந்த இவர் அஜித்தின் வரலாறு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். கனிகா சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், முன்னழகு பற்றி சமுகவலைத்தளத்தில் மோசமாக கருத்துக்களை பதிவிடுகிறார்கள். எனக்கு புரியவில்லை, எதற்காக இப்படியான கருத்துக்களை கூற வேண்டும். உங்கள் வீட்டு பெண்களிடம் இருக்கக்கூடிய அதே விசயம் தான் எனக்கும் இருக்கிறது.
ஏதேனும் புதிதாக இருக்கிறதா? மேலாக என் மார்பகம் பெரிதாக இருக்க என் ஹார்மோன் மாற்றங்கள் தான் காரணம். திருமணம் செய்து கர்ப்பமாகி குழந்தை பெற்று பாலூட்டி இருக்கிறேன். எனக்கு மட்டுமல்ல அனைத்து பெண்களின் வாழ்க்கையிலும் பொதுவாக கண்டிப்பாக இருக்கும்.
சில பெண்களுக்கு பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதை போன்று என் மார்பகமும் பெரிதாக இருக்கிறது. இதை அருவருப்பான வார்த்தைகளால் கருத்து கூறும் மனநிலையில் இருக்கிறார்கள் என்று யோசிக்க தோன்றும் என்று கடுப்பாகி பேசியிருக்கிறார். மேலும் குழந்தை பெற்றப்பின் கூட இப்படியான ஆடை தேவையா என்று கேட்கிறார்கள்.
எனக்கு பிடித்த ஆடையை நான் சுதந்திரம் எனக்கு இருக்கிறது. என்ன ஆடையணிந்தாலும் எப்படி பார்க்க வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. என் மகனுக்கு எப்படி பெண்களை பார்க்க வேண்டும் என்பதை கண்டிப்பாக சொல்லி கொடுத்துதான் வளர்ப்பேன் என்று கனிகா தெரிவித்துள்ளார்.