எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் விலக இதான் காரணம்!! நடிகை கனிகா ஓபன் டாக்..

Kaniha Tamil TV Serials Tamil Actress Ethirneechal Thodargiradhu
By Edward Feb 23, 2026 02:30 AM GMT
Report

நடிகை கனிகா

2002ஆம் ஆண்டு வெளியான 'பைவ் ஸ்டார்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கனிகா. அதன் பின் சில படங்களில் நடித்துவந்த இவர், அஜித்துக்கு ஜோடியாக 'வரலாறு' படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். நடிகை கனகா, சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களைப் பெற்றார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் விலக இதான் காரணம்!! நடிகை கனிகா ஓபன் டாக்.. | Kanika About Why Stepped Away From Ethirneechal

இதனை தொடர்ந்து முதல் பாகம் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் ’எதிர்நீச்சல் தொடர்கிறது’ சீரியல் துவங்கப்பட்டு ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் நடித்து வந்த கனிகா, சில காரணங்களால் விலகியதாக தகவல் வெளியானது.

சமீபத்தில் கூட தமிழக அரசு சார்பில் இந்த சீரியலுக்கான சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் கனிகா. கனிகா அளித்த பேட்டியொன்றில் அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் விலக இதான் காரணம்!! நடிகை கனிகா ஓபன் டாக்.. | Kanika About Why Stepped Away From Ethirneechal

எதிரிநீச்சல் தொடர்கிறது

அதில் கனிகா, திருமணமாகி செட்டிலாகிவிட்டதால் சினிமாவைவிட்டு விலகி இருந்தேன். தற்போது மீண்டும் நடிக்க வந்து எதிர்நீச்சல் சீரியலில் நடித்தேன். நான் லண்டனில் இருக்கும்போதே இயக்குநர் திருச்செல்வம் அவர்கள் ஒரு சீரியலில் என்னை நடிக்கும்படி அழைத்தார். அந்நேரம் என்னால் நடிக்கமுடியவில்லை. அதன்பின் தான் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி ரோலில் நடித்தேன்.

எனக்கு மிகப்பெரியலவில் ஒரு பயரை கொடுத்தது அந்த ரோல். இப்படத்திற்கு விருது கிடைக்கும், அந்ப்படத்திற்கு விருது கிடைக்கும் என நான் நினைத்து ஏங்கிய காலமுண்டு. லேட்டாக கிடைத்தாலும் இந்த விருது எனக்கு லேட்டஸ்டாக கிடைத்திருக்கிறது.

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் விலக இதான் காரணம்!! நடிகை கனிகா ஓபன் டாக்.. | Kanika About Why Stepped Away From Ethirneechal

தற்போது நான் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இருந்து விலகியிருக்கிறேன். அதற்கு பலரும் பல காரணங்களை சொல்கிறார்கள். திடீரென நான் அந்த சீரியலை விட்டு விலகவில்லை. என் மகன் ரிஷி இப்போது 10ஆம் வகுப்பு படிக்கிறான். இந்நேரத்தில் அவனுடன் நான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

இதற்காக நான் சீரியலில் இருந்து விலகினேன். இதுகுறித்து இயக்குநரிடம் ஏற்கனவே கூறிவிட்டேன். இதனால், இது திடீரென எடுத்த முடிவு கிடையாது. நான் இந்த சீரியலில் இருந்து விலகுகிறேன் என்று சேனலுக்கும் தெரியும், இயக்குநருக்கும் தெரியும், சக நடிகர்களுக்கும் தெரியும் என்று நடிகை கனிகா தெரிவித்துள்ளார்.