வாய்ப்புகள் கிடைக்காமல் விபரீத முடிவு! கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட நடிகை!
சினிமாவில் தற்போது பிரபலங்களின் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சுஷாந்த் சிங் ராஜ்புட்டில் இருந்து நடிகையும் விஜே சித்ரா வரை தற்கொலை செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல் கன்னட தொலைக்காட்சி சீரியலில் நடித்து வந்தவர் நடிகை செளஜன்யா. பெங்களூர் அடுக்குமாடி கட்டிடத்தில் தனியாக வசித்து வரும் செளஜன்யா மின்விசிரியில் தூக்கில் தொங்கியபடி தற்கொலை செய்துள்ளார். மூன்று நாட்களாக கடிதம் எழுதியபடி தற்கொலை செய்வதற்கான காரணத்தையும் கூறி விபரீத முடிவை எடுத்துள்ளது கன்னட சினிமாவில் அதிர்ச்சியளித்துள்ளது.
அந்த கடித்தத்தில் சமீபகாலமாக உடல் நலக்குறைவாலும் சினிமாவில் ஏற்பட்ட தற்போதைய சூழலால் பல நாட்களாக சிரமப்பட்டு வருவதாகவும் அதற்காக இந்த முடிவை எடுப்பதை தவிர வேறு வழி இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
