தனுஷின் விவாகரத்து நாடகம்.. உடந்தையாக ஐஸ்வர்யா!! ரஜினிகாந்த் வீட்டில் நடப்பது இதுதான்..
நட்சத்திர தம்பதிகளாக இருந்த தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் தங்களது பிரிவை கடந்த 2022ஆம் ஆண்டு அறிவித்தனர். இது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. பிரிவை அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த வாரம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு முறையிட்டனர். 2004ஆம் ஆண்டு நடந்த தங்களுடைய திருமணம் செல்லாத என அறிவிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விவாகரத்தே ஒரு நாடகம் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் விவாகரத்து வைத்து நாடகம் நடத்தி வருவதாகவும், இருவரும் சேர்ந்து சென்னையில் வாங்கி வீடு ஒன்றில் அடிக்கடி இருவரும் சந்தித்து வருகிறார்களாம். இருவரும் சேர்ந்து வருவதை அக்கம் பக்கத்தினர்களும் உறுதி செய்துள்ளார்களாம். இந்த விவாகரத்துக்கு முழுக்க முழுக்க தனுஷ் மட்டுமே காரணம் கிடையாதாம். ஐஸ்வர்யாவும் இதற்கு காரணம் ஆவார் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியிருந்தார்.
தற்போது டாக்டர் காந்தராஜ் தனுஷ் - ஐஸ்வர்யாவை பற்றி சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். விவாகரத்து சம்பவம் ஒரு பக்கம் இருக்க, நடிகர் தனுஷ், சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ள கூலி படத்தின் டைட்டில் டீசர் வீடியோவை பார்த்து மாஸ் சூப்பர் ஸ்டார், தலைவா என்று எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கிறார். இதுவே ஒரு நாடகம் தான். குடும்பத்தில் நடக்கும் தகராறு சமயத்தில் அவர்கள் படங்கள் வரிசையாக விழுந்து கொண்டே இருந்தது.
அதை தூக்கி நிறுத்த தான் இப்படி செய்திருக்கிறார். சினிமா ஓடனும் என்றால் சில கிசுகிசுக்களை கொண்டு வரவேண்டும். அப்போது தான் ரசிகர்கள் பார்ப்பார்கள். அந்த காலத்தில் ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் உருவாக்குவார்கள். அதேபோல் படத்தில் அப்படி நடக்கும், இதுவே படம் ஓட காரணம்.
விஜய் படங்கள் இதற்கு முன் கதை என்னுடையது என்று பிரச்சனை ஏற்பட்டது. அதை வைத்து படத்தை பிரமோட் செய்வார்கள். 6, 7 படத்திற்கு செட்டானது, அதன்பின் ஒர்க்கவுட் ஆகவில்லை என்பதால் அரசியல் பக்கம் சென்றுவிட்டார். அதனால் தனுஷ் - ஐஸ்வர்யா வேண்டும் என்றே சொல்லி வைத்து பிரிந்திருக்கிறார்கள், அது நாடகம் தான்.
பொறுப்பு துறப்பு: இந்த தகவல் குறித்து பிரபல பத்திரிக்கையாளர் காந்தராஜ் பேசியுள்ளார். இவை அனைத்துமே அவரது தனிப்பட்ட கருத்தே.. இதற்கும் விடுப்பு பக்கத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.