மகேஷின் சதித் திட்டத்திலிருந்து தப்பிய ஸ்வாதி... ரேவதிக்காகக் காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி!
ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில், அடுத்தடுத்து நடக்கப்போகும் அதிரடி திருப்பங்கள் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளன.
ஸ்வாதியிடம் தவறாக நடக்க முயன்ற மகேஷ்... மாயாவின் மிரட்டல்!
கடந்த எபிசோடில், அத்தையின் பேச்சைக் கேட்டு மாறுவேடத்தில் இருக்கும் மகேஷ், ஸ்வாதியின் பாலில் மயக்க மாத்திரையைக் கலந்து கொடுத்து, அவளைத் தனி அறையில் அடைத்து வைத்திருந்தான். இதையடுத்து, மயக்கத்தில் இருக்கும் ஸ்வாதியிடம் தவறாக நடந்துகொண்டு, வேறு வழியில்லாமல் அவளையே திருமணம் செய்ய வைத்துவிடலாம் என்று திட்டம் போடுகிறான் மகேஷ்.

ஆனால், ஸ்வாதியை நெருங்கும்போது அவனுக்குப் பயம் வந்துவிடுகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் அறையை விட்டு வெளியே வரும் மகேஷ், நடந்த விஷயத்தைத் தனது அண்ணி மாயாவிடம் சொல்கிறான். இதைக் கேட்டு கோபமடையும் மாயா, அவனைத் திட்டி தைரியம் சொல்லி மீண்டும் அறைக்குள் அனுப்பி வைக்கிறாள். அதுமட்டுமில்லாமல், யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அவளே வெளியே நின்று கண்காணிக்கவும் செய்கிறாள்.
சரியான நேரத்தில் ஸ்வாதியைக் காப்பாற்றிய ரேவதி!
மண்டபத்தில் ஸ்வாதியைக் காணாமல் தேடிக்கொண்டிருக்கும் ரேவதிக்கு, அவள் எங்கே போனாள் என்ற சந்தேகம் எழுகிறது. அப்போது மண்டபத்தின் மேல்மாடியில் கூடுதலாக ஒரு அறை இருப்பதாக மேனேஜர் சொல்ல, உடனே அங்கே செல்கிறாள் ரேவதி. அங்கு மகேஷ் நிற்பதைப் பார்த்ததும், ஏதோ தவறு நடக்கப்போகிறது என்பதைப் புரிந்துகொண்டு அவனைத் தடுத்து நிறுத்துகிறாள்.

இதனால், ஸ்வாதிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதற்கு முன்பே அவளைப் பத்திரமாக மீட்டு அழைத்து வருகிறாள் ரேவதி. நடந்த விஷயத்தை கார்த்திக்கிடம் சொல்லி ரேவதி குழப்பத்தில் இருக்க, மறுபக்கம் மாயாவுக்கு ஒரு புதிய சந்தேகம் வருகிறது. ரேவதிக்கு தங்களுடைய சதித் திட்டம் தெரிந்துவிட்டதா என்று யோசிக்கத் தொடங்குகிறாள்.
கூறைப்புடவையை எடுக்கக் கிளம்பிய ரேவதி... பதறிப்போன சந்திரகலா!
இதற்கிடையில், திருமணத்துக்குத் தேவையான கூறைப்புடவையை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டதாக ரோஹினியிடம் சொல்கிறாள் ஸ்வாதி. இதைக் கேட்ட ரேவதி, தானே வீட்டுக்குச் சென்று புடவையை எடுத்துவருவதாகக் கிளம்புகிறாள். அப்போது சந்திரகலா அவளைத் தடுத்து, இப்போது வீட்டுக்குப் போக வேண்டாம் என்று சொல்கிறார். ஆனால், நாளை காலை வரை காத்திருக்க முடியாது என்று கூறும் ரேவதி, உடனே வீட்டுக்குக் கிளம்பிவிடுகிறாள். ரேவதி வீட்டுக்குச் செல்வதைப் பார்த்த சந்திரகலா பதற்றமடைகிறார். உடனே சிவானந்திக்குப் போன் செய்து, சதீஷை அடைத்து வைத்திருக்கும் இடத்துக்கு ரேவதி வந்துகொண்டிருப்பதாக எச்சரிக்கிறார்.
வீட்டுக்குள் கேட்ட சத்தம்... சிக்கப்போகும் சதீஷ்?
வீட்டுக்குள் செல்லும் ரேவதி, கூறைப்புடவையைத் தேடிக்கொண்டிருக்கிறாள். அப்போது திடீரென அறையின் ஒரு மூலையிலிருந்து சொம்பு உருளும் சத்தம் கேட்கிறது. அந்தச் சத்தத்தைக் கேட்ட ரேவதி, அங்கே என்ன இருக்கிறது என்று பார்க்கச் செல்கிறாள். அங்கே சதீஷ் இருப்பது ரேவதிக்குத் தெரியவருமா? சிவனாண்டியின் சதித் திட்டம் அம்பலமாகுமா? ரேவதியிடம் சதீஷ் சிக்கிக்கொள்வானா? ஸ்வாதியைக் காப்பாற்றிய ரேவதிக்கு அடுத்ததாக என்ன அதிர்ச்சி காத்திருக்கிறது? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு, ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.