கர்ப்பமாக இருக்கேனா.. கார்த்திகை தீபம் சீரியலில் விலகவில்லை!! நடிகை அர்த்திகா ஓப்பன் டாக்..

Serials Zee Tamil Tamil TV Serials Tamil Actress Actress
By Edward Nov 12, 2024 01:30 PM GMT
Report

கார்த்திகை தீபம்

ஜீ தமிழில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் கார்த்திக் மற்றும் அர்த்திகா முக்கிய ரோலில் நடித்து வந்தனர். ஆனால் இந்த சீரியலில் தீபா இறந்துவிட்டதாக காட்டப்பட்டு சீரியல் முடிக்கப்பட்டு, புதிய கோணத்தில் கார்த்திகை தீபம் இனி ஒளிப்பரப்பாகவுள்ளது.

கர்ப்பமாக இருக்கேனா.. கார்த்திகை தீபம் சீரியலில் விலகவில்லை!! நடிகை அர்த்திகா ஓப்பன் டாக்.. | Karthigai Deepam Serial Arthika Talks About Quit

இந்த சீசன் இரண்டில் இருந்து அர்த்திகா நீக்கப்பட்ட விஷயம் பெரியளவில் பேசப்பட்டு வதந்திகளாகவும் செய்திகள் வெளியாகியது.முதல் சீசனில் நடித்த அனைத்து நடிகர்களும் இருக்க அர்த்திகா மட்டும் நீக்கப்பட்டுள்ளார்.

அர்த்திகா  விளக்கம்

இதுகுறித்து அர்த்திகா அளித்த பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார். கார்த்திகை தீபாம் சீரியலில் தீபா இறந்துவிடுவார் என்று ஒரு மாதத்திற்கு முன்பே தெரியும், அப்போது நான் இயக்குநரிடம் தீபா ரோல்தான் இந்த சீரியலில் முக்கியமான ரோல், அந்த ரோல் வேண்டும் என்றால் கீதாவை சாகும்படி காட்சியை மாற்றுங்கள் என்னு கூறினேன்.

கர்ப்பமாக இருக்கேனா.. கார்த்திகை தீபம் சீரியலில் விலகவில்லை!! நடிகை அர்த்திகா ஓப்பன் டாக்.. | Karthigai Deepam Serial Arthika Talks About Quit

ஆனால் இயக்குநர் முடிவு எடுத்தப்பின் நான் சொல்லி என்ன ஆகப்போகிறது. ஆனால், இணையத்தில் நான் ரொமான்ஸ் காட்சியில் நடிக்க ஒத்துழைப்பு தராததால் நீக்கப்பட்டதாக தப்புத்தப்பாக எழுதி வருகிறார்கள். அதில் உண்மை இல்லை, நடிக்க வந்துவிட்டால் இயக்குநர் என்ன சொன்னாலும் கேட்டுத்தான் ஆகவேண்டும்.

அதை செய்ய மாட்டேன், இதை செய்யமாட்டேன் என்று சொல்லமுடியாது. எல்லாம் தெரிந்துதான் நடிக்க வந்தேன். அதேபோல் கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகிவிட்டதாகவும் செய்தி பரவி வருகிறது.

அப்படி ஏதும் இல்லை, அப்படி நான் கர்ப்பமானால் நிச்சயம் உங்களிடம் தான் முதலில் கூறுவேன், நான் இப்போது நன்றாக இருக்கிறேன், தயவு செய்து தப்புத்தப்பான வதந்திகளை பரப்ப வேண்டுடாம் என்று அர்த்திகா பேட்டியில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அர்த்திகா திருமணமாகியும் சீரியலில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.