கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: ரேவதியைக் காப்பாற்றிய கார்த்திக்... திருமணத்தைத் தடுத்து நிறுத்துவானா?
Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியலில் அடுத்தடுத்து பல பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.
மண்டபத்தை விட்டு வெளியேறிய கார்த்திக்:
கடந்த எபிசோடில், சந்திரகலா போட்டோவைக் காட்டி மிரட்டியதால் கார்த்திக் வேறு வழியில்லாமல் மண்டபத்தை விட்டு வெளியேறினான். இதற்கிடையில், மகேஷ் மணமேடையில் அமரவைக்கப்படுகிறான். அப்போது மண்டபத்திற்கு வரும் ரோகிணி, மயிலிடம் ரேவதி எங்கே என்று கேட்கிறாள். அதற்கு ரேவதி வந்துவிடுவாள் என்று மயில் சமாளிக்கிறார். ஆனால், ரேவதி எங்கே இருக்கிறாள் என்பது உண்மையில் யாருக்கும் தெரியவில்லை.
ரகசியமாக கார்த்திக்கிற்கு போன் செய்த ரேவதி:
மறுபுறம், குடோனில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ரேவதி, அங்கிருக்கும் அடியார்களின் கவனத்தைத் திசைதிருப்பி, ஒருவனுடைய செல்போனை எடுத்து கார்த்திக்கிற்குப் போன் செய்கிறாள். ஆனால், அதற்குள் அடியார்கள் வந்துவிடுவதால் அவளால் எதுவும் பேச முடியவில்லை. இருந்தாலும், மறுமுனையில் எந்தப் பேச்சும் இல்லாமல் வரும் அழைப்பைப் பார்த்த கார்த்திக், அது ரேவதியிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று புரிந்துகொள்கிறான்.
லாட்டரி ஆசை காட்டி இடத்தைக் கண்டுபிடித்த கார்த்திக்:
ரேவதியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும் கார்த்திக், ஒரு திட்டம் போடுகிறான். மயில்வாகனனை வைத்து அதே எண்ணிற்குப் போன் செய்து, உங்களுக்கு பெரிய லாட்டரி பரிசு விழுந்திருக்கிறது என்றும், பரிசைப் பெற முகவரியை அனுப்ப வேண்டும் என்றும் சொல்ல வைக்கிறான். லாட்டரி பரிசு கிடைக்கும் என்ற ஆசையில் அடியார்களும் தாங்கள் இருக்கும் இடத்தின் லொகேஷனை அனுப்பிவிடுகின்றனர். இதையடுத்து, கார்த்திக் உடனே ரேவதியைத் தேடிப் புறப்படுகிறான்.
ரேவதியைக் காப்பாற்றிய கார்த்திக்:
மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க, கார்த்திக் குடோனுக்குச் சென்று அடியார்களின் பிடியிலிருந்து ரேவதியைப் பத்திரமாகக் காப்பாற்றுகிறான். இப்போது ரேவதியை அழைத்துக்கொண்டு கார்த்திக் மண்டபத்திற்கு வருவானா? மகேஷுக்கும் ரேவதிக்கும் நடக்கவிருக்கும் திருமணத்தைச் சரியான நேரத்தில் தடுத்து நிறுத்துவானா? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.