செய்தித்தாளில் திட்டி எழுதிய பத்திரிக்கையாளர்!! கருணாநிதி கொடுத்த பதிலடி இதுதான்.. வடிவேலு
தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவனாக திகழ்ந்து வருபவர் வடிவேலு. பல ஆண்டுகள் ரெட் கார்ட் போடப்பட்டு ரீஎண்ட்ரி கொடுத்து வந்த வடிவேலு மாமன்னன் படத்தில் புதுவிதமான வடிவேலுவாக நடித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமான மாமன்னன் படம் வெளியாகி வடிவேலுவின் உச்சக்கட்ட நடிப்பை ரசித்து வருகிறார்கள் ரசிகர்கள். படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக சில பேட்டிகளிலும் வடிவேலு கலந்து கொண்டு வருகிறார்.
அப்படி சமீபத்தில் அளித்த பேட்டியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பற்றிய சில விசயத்தை பகிர்ந்துள்ளார். ஒரு பத்திரிக்கை நாளிதழில், கருணாநிதி அவர்களை திட்டித்தீர்த்தபடி ஒரு செய்தி வந்துள்ளது.
காலை எழுந்து பத்திரிக்கை படித்த கருணாநிதி, அந்த செய்தியை பார்த்துள்ளார். உடனே அந்த செய்தியை எழுதிய பத்திரிக்கையாளருக்கு கால் செய்து, ஒரு இடத்தில் நல்லா திட்டி இருக்க, நல்லா பேசியிருக்கீங்க, அந்த ’ல’போடக்கூடாது, அந்த ;’ல’ வரணும் இந்த ள, அந்த ’ரு’ போடுங்கன்னு, தமிழ் கத்துக்கிட்டு திட்டுங்கன்னு சொல்லியும் இருக்காரு.
இதனால் அந்த பத்திரிக்கையாளர் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்ததாகவும் தன்னை விமர்சித்தவருக்கு இப்படியொரு பதிலளித்துள்ளார் கருணாநிதி என்று வடிவேலு மெய்சிலிர்த்து கூறியுள்ளார்.