கூட்டத்தை பார்த்து ஓட்டு வரும்னு நினைக்காதீங்க!! விஜய்யை வடிவேலுவாக்கிய பிரபல நடிகர்..

Vijay Gossip Today Thamizhaga Vetri Kazhagam
By Edward Aug 24, 2024 05:30 AM GMT
Report

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி

நடிகர் விஜய் சினிமாவில் இருந்து முழு நேர அரசியலில் ஈடுபட பல வேலைகளை செய்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை சில நாட்களுக்கு முன் பிரம்மாண்ட முறையில் அறிமுகப்படுத்தினார். அவரின் அரசியல் வருகை பற்றியும், கொடி குறித்த விமர்சனங்கள் குறித்து பலர் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

கூட்டத்தை பார்த்து ஓட்டு வரும்னு நினைக்காதீங்க!! விஜய்யை வடிவேலுவாக்கிய பிரபல நடிகர்.. | Karunas Shared His Open About Vijay Politics

கருணாஸ்

அப்படி காமெடி நடிகர் முன்னாள் எம் எல் ஏ-வுமான நடிகர் கருணாஸ் பேட்டியொன்றில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் எம்ஜிஆர் உடன் விஜய்யை ஒப்பிட்டு பேசுகிறார்கள். ஆனால் அந்தக்கால அரசியல் வேறு இப்போதுள்ள அரசியல் வேறு. விஜய் சொல்லும், நினைக்கும் அரசியல் என்பது அவ்வளவு எளிதல்ல.

எம்ஜிஆரின் ஆரம்பகால அரசியலை பார்க்கவேண்டும், அவருக்கு வரும் கூட்டம் போல் விஜய்க்கு வருகிறது. அப்போது விஜய் கண்டிப்பாக அரசியலில் அவர் நினைத்த இடத்தை பிடிப்பார் என்று கூறுவது முட்டாள்தனம். வடிவேலு ஒரு பிரச்சாரத்திற்கு போகும் போது எக்கச்சக்க கூட்டம் கூடியது.

கூட்டத்தை பார்த்து ஓட்டு வரும்னு நினைக்காதீங்க!! விஜய்யை வடிவேலுவாக்கிய பிரபல நடிகர்.. | Karunas Shared His Open About Vijay Politics

ஆனால் அந்த கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறியதா என்றால் இல்லை. அவரை பார்க்கத்தான் கூட்டம் கூடியதே தவிர கூட்டத்தை நம்பி ஓட்டு வந்துவிடும் என்று நினைக்கக்கூடாது. விஜய் மாஸ் நடிகராக இருக்கிறார் என்றால் அவரை பார்க்க கூடுமே தவிர ஓட்டாக மாறுமா என்றால் அது சந்தேகம் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.