கருப்பு திரைப்படத்தின் வசூல் வேட்டை.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
Box office
Karuppu
By Karthick Raja
2026ஆம் ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படமாக தமிழ் சினிமாவிற்கு கருப்பு அமைந்துள்ளது. சூர்யாவின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படமாகவும் சாதனை படைத்துள்ளது.
இப்படியொரு திரைப்படத்தைதான் பல ஆண்டுகளாக கேட்டுக்கொண்டிருந்தோம் என ரசிகர்கள் செம குஷியில் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

பிளாக்பஸ்டர் வெற்றியை சொந்தமாக்கியுள்ள கருப்பு திரைப்படத்தின் வசூல் பற்றி தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், தற்போது 19 நாட்கள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, 19 நாட்களில் கருப்பு திரைப்படம் உலகளவில் ரூ. 315 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். இனி வரும் நாட்களிலும் இந்த வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.