கருப்பு பாக்ஸ் ஆபிஸ்: வசூல் வேட்டையில் நடிகர் சூர்யா.. 4 நாட்களில் மாபெரும் சாதனை

Box office Karuppu
By Karthick Raja May 19, 2026 05:30 AM GMT
Report

சிங்கம் 2 திரைப்படத்திற்கு பின் நடிகர் சூர்யாவிற்கு கமர்ஷியலாக வெற்றி கிடைக்கவில்லை. அது எப்போது கிடைக்கும் என சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், கருப்பு திரைப்படம் அதனை செய்து காட்டியுள்ளது.

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த வாரம் வெளிவந்தது. கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

கருப்பு பாக்ஸ் ஆபிஸ்: வசூல் வேட்டையில் நடிகர் சூர்யா.. 4 நாட்களில் மாபெரும் சாதனை | Karuppu 4 Days Box Office

முதல் நாளில் இருந்தே வசூலில் வேட்டையாடி வரும் கருப்பு, இதுவரை 4 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.

இந்த நிலையில், 4 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 152 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் வசூல் வேட்டை தொடரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.