13 நாட்களை கடந்த கருப்பு.. இதுவரை செய்துள்ள வசூல்
Box office
Karuppu
By Karthick Raja
2026ஆம் ஆண்டில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமாக கொண்டாடப்பட்டு வருகிறது கருப்பு.
சூர்யாவின் திரை வாழ்க்கையிலும் அதிக வசூலை செய்த படமும் இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மே 15ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் நல்ல வரவேற்பை பெற்றதை நாம் பார்த்தோம். இதனால் உலகளவில் 10 நாட்களில் ரூ. 250 கோடி மைல்கல்லை தொட்டது.

இந்த நிலையில், 13 நாட்களை கடந்திருக்கும் கருப்பு திரைப்படம் இதுவரை உலகளவில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது பற்றி விவரம் வெளியாகியுள்ளது.
இதுவரை இப்படம் ரூ. 280 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.