உலகளவில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Box office Karuppu
By Karthick Raja Jun 02, 2026 05:25 AM GMT
Report

கருப்பு திரைப்படம் 2026-ஆம் ஆண்டின் பிளாக்பஸ்டராக மாறியுள்ளது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூர்யா கருப்பு சாமியாக நடித்திருந்தார்.

இவருடன் இணைந்து திரிஷா, இந்திரன்ஸ், அனாகா ஆகியோர் நடித்திருந்தனர். சாய் அப்யங்கர் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த கருப்பு திரைப்படம் ரசிகர்களை முழுமையாக பூர்த்தி செய்து மாபெரும் வெற்றி பெற்றது.

உலகளவில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Karuppu Worldwide Box Office

இந்த நிலையில், இதுவரை இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது, அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.

முதல் நாளிலிருந்தே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வரும் கருப்பு திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 312 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இந்த வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.