47 வயதில் கர்ப்பமா? பிரக்னன்ட் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கஸ்தூரி..
தமிழ் சினிமாவில் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை கஸ்தூரி. இதையடுத்து ராசாத்தி வரும் நாள், சின்னவர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வந்த கஸ்தூரி தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கதாநாயகி வாய்ப்பு குறைய ஆரம்பிக்க ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பதை விட்டுவிட்டு சமுக கருத்துக்களை கூறி மேடைப்பேச்சாளராகவும் சமுக ஆர்வலராகவும் இருந்து வந்தார். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் மூலம் எண்ட்ரி கொடுத்தார்.
வீட்டிற்குள் சென்ற ஒருசில வாரங்களில் கஸ்தூரி எலிமினேட் செய்யப்பட்டார். முக்கிய சீரியல்களில் நடித்து வரும் கஸ்தூரி சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். ஆனால் அது mrPREGNANT என்ற படத்திற்கான ஒரு செட்டப் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.