லாஸ்லியாவை கழட்டிவிட்டு இந்த பெண்ணுடன் திருமணம்!! வைரலாகும் காதலியின் புகைப்படம்..
சின்னத்திரை நடிகராக திகழ்ந்து அதன்பின் வெள்ளித்திரையில் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகர் கவின். கடந்த பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக பங்கேற்ற கவின், இலங்கைப்பெண் லாஸ்லியாவுடன் காதலில் இருந்தார்.
உயிருக்குயிராய் காதலித்து வந்த இருவரும் சில காரணங்களால் பிக்பாஸ் விட்டிலேயே தங்கள் காதலை முறித்துக்கொண்டனர்.
அதன்பின் லாஸ்லியா பக்கமே செல்லாத கவின் ஆல்பம் பாடல்களில் நடித்து வந்தார்.
சமீபத்தில் அவர் நடித்த டாடா படம் மிகப்பெரியளவில் வெற்றியை பெற்று மிகப்பெரிய இடத்தை கவினுக்கு கொடுத்தது.
இந்நிலையில், கவினுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள் கவினின் அம்மா. மோனிகா டேவிட் என்ற பல ஆண்டு தோழியை தான் கவின் திருமணம் செய்யவிருக்கிறார்.
வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி கவின் - மோனிகா திருமணம் செய்யவுள்ளார்கள் என்ற செய்தி வெளியான நிலையில், தற்போது மணப்பெண் மோனிகா டேவிட் புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


