தவறாக பேசி பரவும் வந்ததிகள்.. விஜய் குறித்து பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது பாலிவுட் சினிமாவிலும் களமிறங்கிவிட்டார். இவர் நடிப்பில் அடுத்ததாக ரகு தாத்தா எனும் திரைப்படம் வெளிவரவுள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கீர்த்தி சுரேஷ் கலந்துகொண்டார். இந்த பேட்டியில் வந்ததிகள் குறித்து உங்களுடைய பார்வை என்ன அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ் "விமர்சனம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், சில முறை நம்முடைய குடும்பத்தை பற்றி பேசும்பொழுது, தேவையில்லாத சில விஷயங்கள் கூறும்போது, அதை நான் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிடுவேன்".
" உண்மைக்கு விளக்கம் கொடுத்த தெளிவாகும், அதுவும் வதந்திக்கு விளக்கம் கொடுத்தா அதுவே உண்மை என்று ஆகிவிடும் என விஜய் சார் கூறியிருப்பார். அது மிகவும் உண்மை, தேவையில்லாத விஷயங்களுக்கு நம்முடைய எனர்ஜியை செலவிட வேண்டாம்" என கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.