திரிஷாவை போல அந்த விசயத்தில் சிக்கிய கீர்த்தி சுரேஷ்!! ஷாக்காகும் ரசிகர்கள்..
சினிமாவில் நடிக்கும் நடிகைகள் மீது அவர்கள் ரசிகர்கள் தீவிர காதலில் இருப்பார்கள். அவர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் பின்னால் செல்வதுண்டு. சிலர் அதற்குமேலான அவர்களுக்கு காதல் லட்டர் மற்றும் வீடு வரைக்கும் சென்று பெண் கேட்பார்கள்.
அப்படி சமீபத்தில் நடிகை திரிஷா தன் மனைவி என்று ஏ எல் சூர்யா என்ற நபர் சர்ச்சையை ஏற்படுத்தினார். மேலும் அவருடன் நடித்த விக்ரம், விஜய் மற்றும் அஜித்துடன் நடிக்க போவது குறித்து பல பேட்டிகளில் கண்டபடி திட்டி வந்தார்.
அவரை போல் நடிகை கீர்த்தி சுரேஷும் சமீபத்தில் பாதிக்கப்பட்டுள்ளாராம். லவ் லட்டர் குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். ஒருவரிடம் இருந்து தொடர்ந்து லட்டர் வந்து கொண்டிருந்தது. கல்யாணம் பண்ணனும்னு சொல்லி முகவரியோடு சேர்த்து லட்டர் போட்டார்.
இன்னொருவர், கொஞ்ச நாள்க்கு முன்பு வீடு தேடியே வந்துவிட்டார். அவர் வேறுமாதிரி இருந்தார். நான் அப்போது இல்லாத சமயத்தில் வேலையாட்களிடம், என் கணவராக பாவித்து, ஏன் அவ அப்படி பண்றா, அந்த படம்லாம் பண்றா என்று கூறியுள்ளார்.
கேரளா-ல என் அம்மா வீட்டுக்கே போய், பெண் கேட்டார். மேலும் சென்னை வீட்டில் வந்து, எதுக்கு உதயநிதி கூடலாம் படம் பண்றான்னு கேட்டார். யார்றா நீன்னு கேட்க தோணியதாகவும் அந்த விசயத்தை உதயநிதி கிட்டவே கூறியதாகவும் கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.