நடிகை கீர்த்தி சுரேஷ்-ஆ இது? இப்படியொரு போட்டோஷூட்டுக்கு மாறிட்டாங்களே..
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, ரஜினி முருகன் படத்தின் மூலம் நல்ல வரவேற்பு பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ்.
மலையாள நடிகையின் மகளாக சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வந்தார். விஜய், சூர்யா, விக்ரம், சூரியா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து கோடியில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக மாறினார்.
அப்படி நடித்தாலும் அவர் நடிப்பில் பல படங்கள் தோல்வியை தழுவியது. இதனால் கடுமையான விமர்சனத்திற்காளாகினார். தமிழில் அவர் நடிப்பில் கடைசியாக அண்ணாத்த படம் வெளியாகி ஏமாற்றத்தை கொடுத்தது.
அதன்பின் சாணி காயிதம் என்ற ஓடிடி படம் வெளியாகி நல்ல வரவேற்பு கொடுத்தது. குடும்ப பாங்கான நடிப்பை வெளிப்படுத்தி நடிகையாக இருந்த கீர்த்தி சமீபகாலமாக க்ளாமர் ரூட்டுக்கு தாவியிருக்கிறார்.
தற்போது ரசிகர்களை மயக்கும் படியான அப்படியொரு போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்து வெளியிட்டுள்ளார்.