கீர்த்தி சுரேஷிற்கு விரைவில் திருமணமாம்? மாப்பிள்ளை இஅவரா..
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து மூன்று மொழிகளிலும் கலக்கி கொண்டிருந்த கீர்த்தி, தற்போது பாலிவுட் சினிமாவிற்கும் சென்றுள்ளார்.
வருண் தவானுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள பேபி ஜான் திரைப்படம் டிசம்பர் மாதம் வெளிவரவுள்ளது. இதுவே இவருடைய முதல் பாலிவுட் படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷிற்கு திருமணம் என்று சமீபகாலமாக செய்திகள் பரவி வந்தது. இதுகுறித்து பல விளக்கங்கள் கீர்த்தி சுரேஷ் தரப்பிலும் கூறப்பட்டது.
விரைவில் திருமணமாம்
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் டிசம்பரில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கோவாவில் இந்த திருமணக்கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும் கீர்த்தி சுரேஷின் ஒப்புதலும் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணமகன், கீர்த்தி சுரேஷின் உறவினர் என்றும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகவும் இருக்கிறதாம்.