தொழிலதிபருடன் திருமணமா? வதந்தி பற்றி ஷாக்காகி முற்றுபுள்ளி வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ்..
இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலெடி எடுத்து வைத்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்து பின் வாரிசு நடிகையாக களமிரங்கினார். தற்போது தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் இருந்து வருகிறார்.
மேலும் சமீபத்தில் மகாநதி படத்திற்காக தேசிய விருதினையும் பெற்றார். இந்நிலையில் சினிமா பிரபலங்கள் என்றாலே கிசுகிசுக்களும் வதந்திகளும் பரவுவது இயல்பு தான். அந்த வரிசையில் கீர்த்தி சுரே பல கிசுகிசுக்களில் சிக்கி வருகிறார். சமீபத்தில் திருமணம் குறித்து தொழிலதிபரை மணக்கவிருப்பதாக செய்திகள் பரவி வந்தது.
இதெல்லாம் பொய் வதந்தி என்று அவரின் அம்மா கூறி வந்த நிலையில், அதுபற்றி, கீர்த்தி சுரேஷிடமே கேட்க அதற்கு அவர், அதை பார்த்து ஆச்சரியப்பட்டேன். எங்கிருந்து இந்த தகவல் வெளியானது என்று தெரியாது.எனக்கு அந்தமாதிரி எந்த திட்டமும் இல்லை, இப்போது திருமணம் செய்துகொள்ள நேரமும் இல்லை.
எனது சொந்த வாழ்க்கை பற்றி வதந்தி பரப்பாமல் ஏதாவது நல்ல விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றிருக்கிறார்.