அவங்க அப்படித்தான் சொல்வாங்க!! கீர்த்தி சுரேஷ் அம்மா மேனகா ஓப்பன் டாக்
கீர்த்தி சுரேஷ் திருமணம்
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். சில ஆண்டுகளாக கீர்த்தி சுரேஷ் திருமணம் எப்போது என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் 12 ஆம்தேதி 15 ஆண்டுகால காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்தார் கீர்த்தி சுரேஷ்.
திருமணத்திற்கு விஜய், திரிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றி இரண்டாவது முறை திருமணம் செய்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
திருமணத்திற்கு பின் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் தாயார் மேனகா மகள் குறித்து முன்பு சொன்ன சில விஷயம் வைரலாகி வருகிறது.
தாயார் மேனகா
அதில், கீர்த்தி சுரேஷ் ஆரம்பத்தில் Chubby-யாக இருந்தார். அப்படியிருந்தால் Chubbyயா இருக்காருன்னு சொல்லுவாங்க, உடல் எடையை குறைத்தால் அய்யோ ஒல்லியாகிவிட்டாரே என்று சொல்கிறார்கள். மற்றர்வர்களுக்காக வாழ்ந்தால் நம்மால் வாழ முடியாது. நமக்காத்தான் வாழ வேண்டும்.
மிஸ் இந்தியா படத்தில் நடிக்கும்போது தான் அவர் ஒல்லியாக மாறினார். அப்போதும்கூட உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக அவர் குறைக்கவில்லை, ஹைதராபாத்தில் அவருக்கு உணவு ஒத்துக்கொள்ளவில்லை என்பதால் தான் என்று மேனகா தெரிவித்துள்ளார்.