அந்த விசயத்தில் தயங்கி தயங்கி நடந்துகொண்ட இயக்குனர்!! இறங்கி வந்த கீர்த்தி சுரேஷ்..
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இதன்பின் தமிழில் அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து டாப் இடத்தினை பிடித்தார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி மகாநடி படத்திற்காக தேசிய விருதினையும் வாங்கி பெருமை சேர்த்தார். அதன்பின் தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றும் வரும் நிலையில் கீர்த்தி பல பேட்டிகளில் கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் மார் செல்வராஜ் பற்றிய உண்மையை உடைத்துள்ளார்.
முதலில் மாரி செல்வராஜ் என்னிடம் பேச தயங்கினார். உதைய் சாரிடம் நான் பேசும் போது, கீர்த்தி எல்லாத்தையும் என் கிட்ட கேக்குறாரு உங்ககிட்ட பேச தயக்கப்படுறாருன்னு ரெண்டு விசயம் சொன்னார்.
உடனே அவரிடம் போய், என்னதான் இருந்தாலும் என்னிடம் கேளுங்க, வளர்ந்து வரும் நடிகைகளை பார்த்து என்னிடம் பேச தயக்கம் இருந்தது.அதன்பின் நானே போய் அதையெல்லாம் உடைத்து என்னிடம் சகஜமாக பேசவைத்ததாக கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார்.