அஜித்துடன் அந்த ரோல்-ஆ..வேண்டவே வேண்டாம்னு சொல்லும் கீர்த்தி சுரேஷ்..

Ajith Kumar Keerthy Suresh Tamil Actress Raghuthatha
By Edward Aug 19, 2024 02:00 PM GMT
Report

கீர்த்தி சுரேஷ் ரகு தாத்தா

தமிழ் சினிமாவை தாண்டி, தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அவர் நடிப்பில் ரகு தாத்தா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தையும் வசூலையும் பெற்று வருகிறது.

அஜித்துடன் அந்த ரோல்-ஆ..வேண்டவே வேண்டாம்னு சொல்லும் கீர்த்தி சுரேஷ்.. | Keerthy Suresh Open Talks About Act With Ajith

இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் கீர்த்தி சுரேஷ், அஜித்துடன் எந்த ரோலில் நடிப்பது குறித்து பேசியிருக்கிறார். அதில், அஜித்துடன் நடிக்க எனக்கு எக்கச்சக்க விருப்பம், ஆனால் அவருக்கு தங்கையாக மட்டும் நான் நடிக்கமாட்டேன்.

அஜித்துடன் சந்திப்பு

நடித்தால் ஜோடியாகத்தான் என்றும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கின் போது நான் தங்கிருந்த ஹோட்டலில்தான் அவரை பார்த்தேன். என் ரூமை கிராஸ் செய்து சென்றதை நான் கவனித்து உடனே ஓடிப்போய் பேசினேன்.

அஜித்துடன் அந்த ரோல்-ஆ..வேண்டவே வேண்டாம்னு சொல்லும் கீர்த்தி சுரேஷ்.. | Keerthy Suresh Open Talks About Act With Ajith

நான் அப்படி செய்வதற்கு முன்பே அவரது உதவியாளரிடம் அவர்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்றூ கூறியிருக்கிறார். என் அம்மாவுடன் ஷாலினி நிறைய படங்களில் நடித்திருக்கிறார், அதை பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம் என்று கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.