தூங்கபோகும் முன் இவருக்கு தான் கால் பண்ணுவேன்!! உண்மையை உளறிய நடிகை கீர்த்தி சுரேஷ்...
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழியில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானார்.
தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். மாமன்னன் படம் 29 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து அளித்த பேட்டியொன்றில், இரவு 3 மணிக்கு யாருக்கு கால் செய்து பேசுவீங்க என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கீர்த்தி, 10 மணிக்கு மேல யார் கூப்பிட்டாலும் நான் எடுக்கமாட்டேன். பேசவும்மாட்டேன்.
தூங்குவதற்கு முன் உதைய் சார் கூட நானி, கடைசியா உங்ககிட்டதான் (உதயநிதி) பேசுவன்னு சொல்லியுள்ளார். இதற்கு சிலர் வேறொரு நடிகரை வைத்து, அவருக்கு தான் கால் செய்வார் என்று கலாய்த்து வருகிறார்கள்.
No 3am friend concept huh ?@KeerthyOfficial pic.twitter.com/i6npsSRQCT
— Trends Keerthy (@TrendsKeerthy) June 23, 2023