பல கோடிக்கு அதிபதி!! கீர்த்தி சுரேஷின் வருங்கால கணவர் அந்தோனி யார் தெரியுமா?
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் வருண் தவானுடன் பேபி ஜான் படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி.
படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் எப்போது என்ற கேள்வி கடந்த சில வருடங்களாக இணையத்தில் வைரலானதைவிட காதலர் யார் என்ற கேள்வி தான் எழுந்து வந்தது.
கீர்த்தியின் தந்தை
அந்தவகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பல ஆண்டுகளாக காதலித்து வந்த ஆண் நண்பரை தான் திருமணம் செய்யவுள்ளார் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், 15 ஆண்டுகளாக அந்தோனி தட்டில் என்ற ஆண் நண்பவரை கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும் டிசம்பர் மாதம் திருமணம் என்றும் கூறப்பட்டது.
இதுகுறித்து கீர்த்தியின் தந்தை அளித்த பேட்டியில், கீர்த்தி சுரேஷும், அந்தோனி தட்டிலும் பள்ளிப்பருவத்தில் இருந்தே நண்பர்கள். 15 ஆண்டுகளாக இருவரும் நண்பர்களாக இருந்தாலும் அண்மையில் தான் காதலை வெளிப்படுத்திக் கொண்டனர் என்று கூறியிருக்கிறார்.
அந்தோனி தட்டில்
அந்தோனி தட்டிலை பொறுத்தவரை கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் கொச்சின் மற்றும் துபாய் ஆகிய பகுதிகளில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்தோனி தட்டில் பொறியியல் படிப்பை முடித்து கத்தாரில் வேலை செய்ததாகவும் பின் கொச்சினுக்கு திரும்பி ஜன்னல்களுக்கான நவீன திரைச்சீலைகள் தயாரிக்கும் தொழிலை மேற்கொண்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
Asperos Window Solutions என்ற பெயரில் இவரது நிறுவனம் இருக்கிறது. Kaipalath Habeeb Farooque என்ற நிறுவனத்தின் முதன்மை உரிமையாளராகவும் செயல்பட்டு வருகிறாராம். அதுமட்டும் இல்லாமல் கொச்சினில் ரிசார்ட்டுகளையும் நடத்தி வருகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.