விஜய் கட்சியில் சீட்டு கேட்ட கீர்த்தி சுரேஷ்.. இருவருக்கும் இடையே நடந்த சந்திப்பு!!

Vijay Keerthy Suresh Indian Actress Actress
By Dhiviyarajan Aug 02, 2024 07:25 AM GMT
Report

நடிகர் தமிழ் சினிமாவில் ஸ்டார் நடிகராக இருப்பவர் தான் விஜய். அரசியலில் களமிறங்கிவிட்டதால், தளபதி 69 தான் அவரது கடைசி படமாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷிடம், விஜய்யின் அரசியல் என்ட்ரி தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ரிவால்வர் ரீட்டா படம் நடித்துக்கொண்டிருந்த போது அங்கு பக்கத்திலேயே விஜய் அவர்களின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அந்த சமயத்தில் விஜய்யின் அரசியல் வருகை தொடர்பான தகவல்கள் வெளிவந்தன.

நான் உடனே அவரை சந்தித்து நானும் உங்களது கட்சியில் ஒரு உறுப்பினராக மாறுகிறேன் என்று சொன்னேன். அதன் பின் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தேன்.

"கடைசி படம் என்று எழுதும் போது கஷ்டமாக இருந்தது, ஆனாலும் சந்தோஷமாக இருக்கிறது என்று விஜய் கூறினார்.

அப்போது அவரிடம், "உங்களுடைய கட்சியில் எனக்கு சீட்டு கிடைக்குமா?" என்று கேட்டேன். அதுக்கு விஜய் சிரித்தார் என கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.  

விஜய் கட்சியில் சீட்டு கேட்ட கீர்த்தி சுரேஷ்.. இருவருக்கும் இடையே நடந்த சந்திப்பு!! | Keerthy Suresh Talk About Vijay Political Entry