நான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண்!! கேவலமான மெசேஜ் செய்பவர்களுக்கு கெனிஷா பதிலடி
ரவி மோகன் - ஆர்த்தி
தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய சினிமாவில் அதிகளவில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இருப்பது ரவி மோகன் - ஆர்த்தி ரவி விவாகரத்து விவகாரம் பற்றித்தான்.
கடந்த ஆண்டு மனைவியை விவாகரத்து பெறவுள்ளதாக அறிக்கை வெளியிட்ட ரவி மோகன், அடுத்தடுத்த அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். அவர் ஒரு பக்கம் இருக்க ஆர்த்தி ரவியும் தன் பக்கத்திற்கு அறிக்கையை வெளியிட்டு வந்தார்.
இவர்கள் இந்த பிரச்சனை முக்கிய காரணமாக இருப்பது பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் என்று கூறப்பட்ட நிலையில், ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில், ரவி மோகன், கெனிஷாவுடன் கைக்கோர்த்தபடி ஜோடியாக வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனை தொடர்ந்து கெனிஷாவை கண்டபடி இணையத்தில் கருத்துக்கள் தெரிவித்து வந்தனர்.
கெனிஷா பதிலடி
இந்நிலையில் தனக்கு கொலை மிரட்டல்கள் அதிகம் வருவதாகவும், என்மீது தவறில்லை, அதை நிரூபிக்க நீதிமன்றத்திற்கு கூட்டிச்சென்றாலும் நான் வருவேன் என்று தெரிவித்துள்ளார்.
அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலரும் கெனிஷாவை படுமோசமான கெட்டவார்த்தைகளில் திட்டி மெசேஜ் அனுப்பி வருகிறார்கள். அதையெல்லாம் ஸ்கிரீஷாட் எடுத்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கெனிஷா பகிர்ந்து பதிலடி கொடுத்திருக்கிறார்.