எல்லா ஹிந்தி படங்களும் கொஞ்சம் ஓரம் போ.. இனிமே இங்க ராக்கி பாய் தான் வசூல் மன்னன்
K.G.F: Chapter 2
By Kathick
கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் கே.ஜி.எப் 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து மாபெரும் எதிர்பார்ப்பில் இப்படம் வெளிவந்தது. அதே போல் ரசிகர்களின் முழு எதிர்பார்ப்பையும் இப்படம் பூர்த்தி செய்தது.
மேலும், இப்படம் அனைத்து மொழிகளிலும் தொடர்ந்து வசூல் சாதனை செய்து வருகிறது கே.ஜி.எப் 2. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், பாலிவுட் திரையுலகில் இதுவரை ரூ. 400 கோடி வசூல் செய்துள்ளதாம் கே.ஜி.எப் 2 திரைப்படம்.
இந்த வசூலின் மூலம் ஹிந்தி படங்களின் அனைத்து பாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையையும் கே.ஜி.எப் 2 முறியடித்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.