குஷ்பூவை நடிக்க வைத்து ஏமாற்றிய இயக்குனர்!! விஜய்யின் வாரிசு-க்காக இத்தனை லட்சம் சம்பளமா?
தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட நடிகராகவும் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றும் பலரால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய். வாரிசு படத்திற்கு பின் தற்போது லியோ படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

குடும்ப பின்னணி கொண்ட கதையாக உருவாகி 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனையை படத்த வாரிசு படத்தினை பற்றி பல சுவாரஷ்யமான தகவல்கள் வெளியாகி வருகிறது.
அப்படி படத்தில் 17 நிமிடங்கள் நடித்தும் வாரிசு வெளியான காட்சிகளில் ஒரு நிமிடம் கூட நடிகை குஷ்பூ காட்சி இடம்பெறவில்லை.
இதுகுறித்து பலர் கிண்டல் செய்து வந்த நிலையில் அப்படத்தில் எடிட்டராக பணியாற்றிய பிரவின் கே எல், குஷ்பூ காட்சி குறித்து பகிர்ந்துள்ளார். குஷ்பூ இப்படத்தில் அருமையாக நடித்திருந்தார், அதோடு அவரது கதாபாத்திரமும் சிறப்பாக அமைந்தது.

குஷ்புவின் 17 நிமிட காட்சியை நீக்கியதற்காக எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது.
ஆனால் நீக்க வேண்டிய கடினமான கட்டாயத்தில் அப்படியொரு முடிவை எடுத்தோம் அவர் நடித்த டெலீட் காட்சிகள் கண்டுப்பாக குஷ்பூவை பார்க்கலாம் என்று கூறியிருக்கிறார்.
மேலும் வாரிசு படத்தில் 17 நிமிட காட்சிக்காக குஷ்பூ சுமார் 40 லட்சம் வரை சம்பளமாக பெற்றுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.