சர்ச்சைக்குரிய காட்சியை வெட்டி தூக்கிய சென்சார்.. வருத்ததில் விக்ரம் ரசிகர்கள்
Vikram
Mirnalini Ravi
Srinidhi Shetty
By Kathick
கோப்ரா
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் கோப்ரா. இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்னாலினி ரவி, மியா ஜார்ஜ், இஃபார்ன் பதான், மீனாட்சி என பல நட்சத்திரங்கள் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார்கள்.
வருகிற 31ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இருக்கிறார்கள்.
சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம்
இந்நிலையில், இப்படத்தின் சென்சார் முடிந்து சான்றிதழ் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இப்படத்தின் ரன் டைம் மட்டுமே 3 மணிநேரம் 3 நிமிடம் 3 செகண்ட்ஸ் என அறிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி சென்சார் குழு கோப்ரா படத்தில் இடம்பெற்ற லிப் லாக் முத்தக்காட்சி ஒன்றை படத்தில் இருந்து நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.