20 கோடி பங்களா.. 4 கார் பார்க்கிங்!! மனைவிக்காக கோடிக்கணக்கில் சொத்து வாங்கி குட்டி கோலி ராகுல்..
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான கே எல் ராகுல் சமீபத்தில் தன்னுடைய மனைவிக்கு வாங்கிய சொத்து தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. முக்கிய போட்டிகளில் ஆடி வரும் கே எல் ராகுல் நடிகர் சுனில் செட்டியின் மகள் நடிகை ஆதியா செட்டியை 2020ல் காதலித்து வந்துள்ளார்.
3 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு 2023ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு மனைவி ஆதியாவுட்ன எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்தார். கே எல் ராகுலுக்கு ஆதியாவின் தந்தை சுனி செட்டி, மும்பையில் உள்ள 50 கோடி மதிப்பிலான பங்களாவை பரிசாக வழங்கினார்.
அங்கு இருவரும் வாழ்ந்து வரும் சூழலில் சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்கள் குடியிருக்கும் பாலி ஹில் பகுதியில் கே எல் ராகுல் 20 கோடி மதிப்பிலான பங்களா ஒன்றினை வாங்கியிருக்கிறாராம்.
இதற்கான முத்திரை தாள் கட்டணமாக 1.20 கோடியும் பதிவு கட்டணமாக 30 ஆயிரத்தையும் கட்டி கே எல் ராகுல் வாங்கி இருக்கிறார். இந்த பங்களாவில் தம்பதியினருக்கு மட்டும் 4 கார்களை நிறுத்திக்கொள்ளும் அளவிற்கு வசதி செய்யப்பட்டுள்ளதாம்.