விஜய்யா வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்கி தயாரிப்பாளர்.. 23 வருஷமா சிக்கித்தவித்த நடிகை சிம்ரன்..

Ajith Kumar Vijay Simran
By Jai Sep 12, 2022 12:20 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 90 காலக்கட்டத்தில் அஜித், சூர்யா, விஜய்க்கு ஜோடியாக பல படங்களில் ஜோடியாக நடித்து ஹிட் கொடுத்த நடிகை சிம்ரம்.

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்து வந்த சிம்ரன், தென்னவன், கல்கண்டு, ஜாம்பவான் போன்ற படங்களை இயக்கிய நந்தகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்திருந்தார். கோடீஸ்வரன் என்று பெயரிடப்பட்ட படம் பிரம்மாண்டமாக இயக்க தயாரிப்பாளர் குஞ்சுமோன் தயாரிக்க சம்மதம் தெரிவித்திருந்தார்.

விஜய்யா வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்கி தயாரிப்பாளர்.. 23 வருஷமா சிக்கித்தவித்த நடிகை சிம்ரன்.. | Kodiswaran Movie Not Release Some Reason Simran

விஜய்யை ஒதுக்கிய தயாரிப்பாளர்

இப்படத்தில் நடிக்க நடிகர் விஜய்யிடம் கதை கூறியுள்ளார் நந்தகுமார். விஜய்யும் ஓகே என்று கூறியிருந்தார். ஆனால் படத்தின் பட்ஜெட் 2 கோடி என்பதால், விஜய்யை நம்பி அவ்வளவு பணம் போட முடியாது என்று வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

அதன்பின் அஜித்திடம் கதை கூற அவர் தரப்பே தயாரிக்காவும் முன் வந்துள்ளனர். ஆனால் குஞ்சு மோன் தயாரிப்பதாக இயக்குனர் கூறியதால் அஜித் விலகிவிட்டார். பின் குஞ்சு மோன் மகனை கதாநாயகனாக போட்டு சிம்ரனை ஜோடியாக நடிக்க வைத்து கோடீஸ்வரன் படம் உருவானது.

விஜய்யா வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்கி தயாரிப்பாளர்.. 23 வருஷமா சிக்கித்தவித்த நடிகை சிம்ரன்.. | Kodiswaran Movie Not Release Some Reason Simran

ஏமாற்றத்தில் சிம்ரன்

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர் ஆட்டம் போட்ட ஒரு பாடலுக்கு மட்டும் 1 கோடி செலவாகி மொத்த பட்ஜெட் மூன்றே முக்கால் கோடிக்கு சென்று எடுக்கப்பட்டது.

படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகியும் இன்று வரை இப்படம் வெளியாகவில்லை. இப்படத்தில் நடித்த சிம்ரனுக்கு சம்பளம் கொடுத்தார்களா இல்லையா என்ற கேள்வியும் அப்போதைய காலத்தில் சர்ச்சையானது.