நடிகையுடன் ரகசிய தொடர்பு!! ஃபோன் செய்து திட்டித்தீர்த்த ஆறு எழுத்து நடிகரின் மனைவி..

Gossip Today Tamil Actors Tamil Actress
By Edward Aug 21, 2024 12:30 PM GMT
Report

ஆறு எழுத்து நடிகர்

இவரெல்லாம் ஒரு நடிகரா என்று நடிக்க வந்த புதிதில் விமர்சிக்கப்பட்ட நடிகர், வாரிசு நடிகர் என்ற பெயரையும் பெற்றார். விமர்சனத்தை கண்டுக்கொள்ளாமல் தன்னைத்தானே செதுக்கி மிகப்பெரிய இடத்தில் வந்து சேர்ந்திருக்கிறார் அந்த நடிகர். கடைசியாக நடித்த சில படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அடிவாங்கிய படங்களும் இருக்கிறது. சமீபத்தில் அவரது படங்கள் ரிலீஸாவதற்கு முன்பே சில நூறு கோடிகளில் வியாபராம் ஆகக்கூடியவையாக மாறியுள்ளது.

நடிகையுடன் ரகசிய தொடர்பு!! ஃபோன் செய்து திட்டித்தீர்த்த ஆறு எழுத்து நடிகரின் மனைவி.. | Kollywood Actors Wife Scolded The Actress

அதற்கு காரணம் கோலிவுட்டின் வசூல் ராஜா என்று அவரை விநியோகஸ்தர்கள் சொல்வதுண்டு. எவ்வளவு புகழ் உச்சிக்கு சென்றாலும் சில கிசுகிசுவில் சிக்கியும் வந்திருக்கிறார் அந்த ஆறு எழுத்து நடிகர். ஆரம்பத்தில் இருந்தே பல நடிகைகளுடன் சேர்ந்து பேசப்பட்டு வந்தார். அதற்கு காரணம், நடிகைகளுடன் அப்படி இப்படியான காட்சியில் நடித்ததுதான். அப்படி ஒருகட்டத்தில் ஃபேமஸ் நடிகையுடன் ஆறு எழத்து நடிகருடன் தொடர்பில் இருந்ததாகவும் விலையுயர்ந்த பரிசுகளை அடிக்கடி கொடுத்ததாகவும் பேசப்பட்டது.

சில காலம் அப்படி இல்லாமல் இருந்தவர் எட்டு எழுத்து இயக்குனர் இயக்கிய காஃபி படத்தில் மீண்டும் ஃபேமஸ் நடிகையும் ஜோடி சேர்ந்தார். கெமிஸ்ட்ரி பக்காவாக குடும்பத்தில் பூகம்பம் வெடித்து, மனைவிக்கும் நடிகருக்கும் சண்டை ஏற்பட மனைவி அயல்தேசம் பறந்துவிட்டாராம்.

நடிகையுடன் ரகசிய தொடர்பு!! ஃபோன் செய்து திட்டித்தீர்த்த ஆறு எழுத்து நடிகரின் மனைவி.. | Kollywood Actors Wife Scolded The Actress

நடிகரின் மனைவி நடிகைக்கு கால்

நடிகரின் மனைவி நடிகைக்கு கால் செய்து பயங்கராக திட்டியிருக்கிறாராம். அதாவது நடிகையின் மோகத்தில் இருந்து கணவரை பிடிக்க தன் தந்தையிடமும் நடிகரின் குடும்பத்தினரிடம் கூறியும் அவர்கள் எந்த முடிவும் எடுக்கமுடியாது என்று கைவிரித்துவிட்டார்களாம். அதனால் தான் நேரடியாக நடிகைக்கு கால் செய்து, சேர்ந்து படங்களில் நடிக்கிறீங்க சரி, அது உங்க தொழில். அது என்ன தனி வீட்டில் இருவரும் இருக்கிறது.

படம் முடிந்தால் உங்க வேலையை நீங்கள் பார்க்க வேண்டியதுதானே, அதைவிட்டுவிட்டு அடுத்தவங்க குடும்பத்தை ஏன் கெடுக்குறீங்க என்று பயங்கரமாக நடிகையிடம் நடிகரின் மனைவி பேசியிருக்கிறார். இதனால் நடிகரிடமிருந்து விலக நடிகை தீர்க்கமான முடிவை எடுத்து எஸ்கேப் ஆகிவிட்டாராம்.